ஆண்ட்ரே ரசலை திணறடித்து வெற்றியை தேடித்தந்த மிட்சல் ஸ்டார்க் – புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

Starc
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 4வது போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 44 பந்துகளில் 75 ரன்களையும், கேப்டன் ஆரோன் பின்ச் 37 பந்துகளில் 53 ரன்களையும் குவித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து 190 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் மிடில் ஓவர்களில் சரிவை கண்டது. அந்த அணியின் துவக்க வீரர் சிமெண்ட்ஸ் 48 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்காத போது கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டது.

russell

19-வது ஓவரை எதிர்கொண்ட ரசல் மற்றும் ஆலன் ஆகியோர் அந்த ஓவரில் 25 ரன்கள் விளாசினார் இதன் காரணமாக இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த 20வது ஓவரை ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டார்க் வீசினார். முதல் 5 பந்துகளை ரசலை எதிரில் வைத்தும் டாட் பாலாக வீசிய ஸ்டார்க் வீசிய கடைசி பந்தில் 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

starc 1

ஒரு ஓவரில் எத்தனை ரன்கள் வேண்டுமானாலும் அடிக்கும் பலம் வாய்ந்த ரசலை எதிரில் நிற்க வைத்து 11 ரன்களுக்குள் ஸ்டார்க் சுருட்டியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி தற்போது ஸ்டார்க் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த சிறப்பான பந்து வீச்சிற்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement