பெங்களூரு அணிக்கு மேலும் சிக்கல். முக்கியவீரர் விலகல் – விவரம் இதோ

Abrcb

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. ரசிகர்களின் தொடர் ஆதரவால் ஆண்டுதோறும் பலத்த எதிர்பார்ப்போடு துவங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு இந்த ஆண்டும் அமோக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 13 ஆவது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறுகிறது.

Ipl cup

இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் வருகின்ற 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏல போட்டியில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 713 இந்திய வீரர்களும் 258 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். ஏற்கனவே இதிலிருந்து 23 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீதி வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து பலர் பேர் இடம் பிடித்து உள்ளனர். இந்நிலையில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு மிட்சல் ஸ்டார்க் ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு விளையாட முடியாது என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் ஏலத்தில் இருந்தும் விலகியுள்ளார்.

starc

ஏனெனில் அவர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் காயம் காரணமாக முழுவதும் விளையாடவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அவரை பவுலிங்கில் பலமின்றி தவிக்கும் பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுக்க முடிவு செய்து இருந்த நிலையில் ஸ்டார்க் விலகியுள்ளது பந்துவீச்சு பலமின்றி திகழும் பெங்களூரு அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -