இதைவிட மிகச்சரியாக நடு ஸ்டம்பை தகர்த்த பந்தை பார்த்திருக்க முடியாது. ஸ்டார்க் செய்த க்ளீன் போல்ட் – வைரலாகும் வீடியோ

Starc

ஆஸ்திரேலிய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. பிறகு 197 ரன்கள் குவித்தார் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி அஷ்டன் அகர் பந்து வீச்சில் 89 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகர் ஹாட்ரிக் விக்கெட் உட்பட 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன மிட்சல் ஸ்டார்க் தென்னாபிரிக்க அணியின் துவக்க வீரரான டிகாக்-கின் விக்கெட்டை க்ளீன் போல்ட் மூலம் வீழ்த்தினார். இந்த விக்கெட் இதற்கு மேல் க்ளீன் போல்ட் செய்ய முடியாத அளவிற்கு அவ்வளவு அருமையாக இருந்தது.

அந்த பந்து மிகத்துல்லியமாக நடு ஸ்டம்பை அடித்து பிளந்தது. இந்த விக்கெட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -