Starc : பேட்டை காலால் எட்டி உதைத்து மைதானத்தில் இருந்து விரக்தியுடன் வெளியேறிய ஸ்டோக்ஸ்

Stokes
- Advertisement -

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து போதிலும் தனி ஒரு ஆளாக நின்று பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு திகிலூட்டினார். அவர் ஸ்டார்க் வீசிய ஒரு அபாரமான யார்க்கரில் போல்ட் ஆகி வெளியேறினார். அந்த பந்தினை கணிக்க முடியாமல் போல்ட் ஆகிய ஸ்டோக்ஸ் அந்த ஏமாற்றத்தை தாங்காமல் தன்னுடைய பேட்டை கீழே போட்டு அதை தன் காலால் எட்டி உதைத்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். மேலும் அதைத் தொடர்ந்து அவர் விரக்தியுடன் பேட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினார் இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த யார்க்கர் என்று இந்த பந்தை கூறலாம். அந்த அளவிற்கு வெகு விரைவாகவும், ஸ்விங் ஆகியும் இந்த பந்து ஸ்டோக்ஸ் விளையாடியபோது ஸ்டம்பை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Starc

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்தது. பின்ச் அதிகபட்சமாக 100 ரன்களை குவித்தார் மேலும் வார்னர் 53 ரன்கள் குவித்தார் .

Finch

இதனைத் தொடர்ந்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 44.4 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துசார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் பெரென்ட்ராப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement