12 வருட சாதனையை அசால்டாக தட்டி தூக்கிய மிட்சல் ஸ்டார்க் – என்ன சாதனை தெரியுமா ?

Starc
- Advertisement -

உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்தது. பர்மிங்காமில் நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஸ்மித் 85 ரன்கள் அடித்தார்.

aus vs eng

அதன் பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 33வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் அதிரடியை வெளிப்படுத்திய ஜேசன் ராய் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அது யாதெனில் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் தற்போது படைத்துள்ளார். இந்த உலக கோப்பை தொடரில் மட்டும் ஸ்டார்க் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Starc

இதற்கு முன் சாதனையாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 26 விக்கெட்டுகளை எடுத்து ஒரு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்திய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்டார்க் அவரின் சாதனையை முறியடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement