ஐ.பி.எல் தொடர் மூலம் 2400 கோடி வருவாய் ஈட்டியும் வருத்தத்தில் இருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் – விவரம் இதோ

Hot-star
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் பாதிப்பிற்கு பிறகு பல நெருக்கடிகளைத் தாண்டி இந்த வருட ஐபிஎல் சீசன் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது பிசிசிஐ. இந்த தொடரால் பெரிய அளவு வருமான இழப்பு இல்லை என்றாலும் அடுத்த சீசனில் புதிய அணிகளை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இந்நிலையில் பிசிசிஐக்கு ஓரளவு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Star-sports

- Advertisement -

அதே வேளையில் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்ற ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய தொகை கொடுத்து ஒளிபரப்பு உரிமையை எடுத்த ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒளிபரப்பி வந்தது.

அதன்படி தமிழ் தெலுங்கு என பல மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் போட்டிகளை நேரலை செய்து வந்தன. இந்நிலையில் நடந்து முடிந்த இந்த சீசனுக்கு 2,400 கோடி ரூபாய் இவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த 6 மாதமாக கொரோனா காரணமாக செயல்படாமல் இருந்த பல்வேறு நிறுவனங்கள் இந்த தொடரில் விளம்பரம் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள் என்று கூறப்பட்டது.

hot star 1

ஆனால் எதிர்பார்த்தபடி இல்லாமல் விளம்பர ஒப்பந்தங்களும் கிடைத்தன. அதன்மூலம் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தொலைக்காட்சியின் மூலம் 2250 கோடி ரூபாயும், ஹாட்ஸ்டார் மூலம் 250 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இந்த வருமானம் அதிகம் என்றாலும் லாக்டவுன் உள்ளிட்ட சூழல்கள் காரணமாக போட்டிகளைக் கண்டு களிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு போட்டிகளை கண்டு ரசித்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது. மேலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு வருமானம் இந்த ஆண்டு ஒற்றை இலக்க சதவீதத்தில் தான் அதிகரித்துள்ளது. முன்கூட்டியே விளம்பரங்கள் அதிகமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தால் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

iplstar

ஆனால் நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே விளம்பரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதால் லாபம் கணிசமாக குறைந்துள்ளது என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கமான பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த சீசனில் மட்டும் 18 ஸ்பான்சர்கள் மற்றும் 117 விளம்பரதாரர்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement