கடைசி நேரத்தில் இந்த ஐபிஎல்லில் விலகிய 6 அதிரடி வீரர்கள்…ஷாக் ஆனா ரசிகர்கள் ! – காரணம் இதுதான்

Suniel
- Advertisement -

இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசன் இன்றுமுதல் தொடங்கப்பட உள்ளன. இன்று மாலை முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது.  மொத்தம் 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஐபிஎல் போட்டிகளானதுஇன்று தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

IPL

- Advertisement -

இன்று இரவு நடைபெறும் முதல்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகின்றது.இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்  அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இரண்டாண்டு தடைக்கு பின்னர் மீண்டும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.அதேவேளையில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் இன்று இரவு தனது பலத்தை சொந்த மண்ணில் காட்டிட உள்ளது. எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

இந்த ஐபிஎல் சீசனின் போது போட்டி போட்டுக்கொண்டு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சில வீரர்கள் திடீரென்று சில காரணங்களால் விலகியுள்ளனர்.அப்படி இந்த ஐபிஎல்-இல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் யாரென்றும், அவர்கள் விலகியதற்கான காரணத்தையும் காண்போம் வாருங்கள்.

- Advertisement -

ஸ்டீவன் ஸ்மித்.

Smith

2015 ம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கி இரண்டாண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த பின் இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தவிருந்தார். ஆனால் தென்ஆப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்தியதில் தொடர்பிருந்த காரணத்தினால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன் பிரதிபலிப்பாக ஐபிஎல்-யிலும் ஸ்மித் விளையாட மாட்டார் என ஐபிஎல் தலைவர் ராஜேஷ் சுக்லா கூற தற்போது ஸ்மித்திற்கு பதிலாக மாற்று வீரராக தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ரபேடா.

rabada2

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான ரபேடா காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார்.உலகின் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளராக வலம் வருபவர் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ரபேடா.இந்த ஐபிஎல் சீசனுக்காக ரபேடாவை 4.2 கோடி ரூபாய் தந்து ஏலம் எடுத்திருந்தது டெல்லி அணி.

- Advertisement -

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நான் டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது ரபேடா கடும் முதுகுவலியால் அவதிப்பட்டார்.

இந்நிலையில் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் அவருக்கு மூன்று மாதங்கள் கட்டாய ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் தற்போது இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.கடைசி நேரத்தில் ரபேடாவின் இந்த திடீர் விலகல் ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.

மிட்செல் சான்ட்னெர்.

mitchell

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான மிட்செல் சான்ட்னெர் திடீரென இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது இவருக்கு ஆட்டத்தின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

பின்னர் மருத்துவ பரிசோதனையில் கால் முட்டியில் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதிகஅளவு காயம் ஏற்பட்டிருப்பதால் ஆபரேஷன் செய்வதே ஒரே வழி என்று டாக்டர்கள் கூறியதையடுத்து ஆபரேசன் செய்துகொள்ள சம்மதித்துள்ளார்.
இதனால் இந்த ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்.

மிட்செல் ஸ்டார்க்.

starc

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவின் முன்னனி பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் விளையாடிய போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல்-இல் மிட்செல் ஸ்டார்கினால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போன மிட்செல் ஸ்டார்கினால் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக கடைசி நேரத்தில் விளையாடமுடியாமல் போயியுள்ளது.மிட்செல் ஸ்டார்க் தற்போது கொல்கத்தா அணியிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

டேவிட் வார்னர்.

warner

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி கேப்டனான டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடமுடியாமல் போயுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டது இவர்தான் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்நிலையில் இவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹைதராபாத் அணி இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸை இந்த ஐபிஎல் சீசனில் களமிறக்கவுள்ளது.

சுனில் நரேன்.

narine

கொல்கத்தா அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான இவர் மீது பந்தை எறிவதாக நடுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்த புகார் தற்போது விசாரணையில் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் சுனில் நரேன் பங்கேற்பது கேள்விக்குறியே !!

Advertisement