இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக கடந்த 2011ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடினார். அதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிக் கொண்டிருந்த போது ஸ்பாட் பிக்சிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் அந்த தடையை ஏழு வருடங்களாக குறைத்துள்ளார் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த். இந்த தடை வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் வழக்கம்போல் நான் மீண்டும் கிரிக்கெட் ஆடுகளத்தில் இந்தியாவிற்காக ஆடுவேன் என்று சூளுரைத்துள்ளார் ஸ்ரீசாந்த். இதுகுறித்து அவர் கூறுகையில்…
முடியாதது என்று எதுவும் இல்லை. நான் மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவேன் .இந்த செப்டம்பர் மாதத்துடன் எனது தடைக்காலம் முடிந்தது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நான் விளையாடுவேன். அந்த உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்து பெற்றுதான் விட்டு தான் ஓய்வு பெறுவேன். இந்திய அணி உலக கோப்பையை வெல்வது எனது லட்சியம்.
இந்தியாவின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் தனது 42வது வயது வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வயது முதிர்வு வைத்துவிட்டு கிரிக்கெட் ஆட முடியாது என்று எதுவும் இல்லை . நான் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
ஸ்ரீசாந்த் இதுவரை இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளில் 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் எடுப்பதும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தான் விளையாட வேண்டும் என்பதனையும் தனது விருப்பமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.