நான் எப்போ பவுலிங் போட்டாலும் டிவில்லியர்ஸ் அவுட் ஆகி தான் போவாரு – தற்பெருமை பேசிய இந்திய வீரர்

Abd
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் 2004ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடி வந்தார். இதுவரை 114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவிலியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென அதிரடியாக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட அது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

abd1

ஏனெனில் ஓய்வு பெறும் வரை தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிவில்லியர்ஸ் மேலும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் தற்போது ஓய்வில் இருந்து மீண்டும் டி20 உலகக்கோப்பை அணிக்கு திரும்பும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

- Advertisement -

தனது அதிரடியான பேட்டிங், திறமையான பீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என பல்வேறு வகைகளிலும் ரசிகர்களைக் கவர்ந்த டிவில்லியர்ஸ் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடும் வீரர் என்பதால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிஸ்டர் 360 என்ற செல்லப்பெயரும் உள்ளது. ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ABD-1

மேலும் ஐ.பி.எல் தொடரில் தான் கடைசி வரை அந்த அணிக்காக மட்டுமே விளையாட ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஏபிடி குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் தனது கருத்தினைத் பகிர்ந்துள்ளார் அதில் அவர் குறிப்பிட்டதாவது : ஆல் டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டிவிலியர்ஸ் என் பந்தினை சந்தித்தால் மட்டும் எப்போதும் ஆட்டம் இழந்து விடுவார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் : நான் எப்போது அவருக்கு எதிராக பந்து வீசினாலும் அதனை எதிர்கொள்ளும் போது ஏன் அவுட் ஆகிறார் என்று எனக்கு தெரியவில்லை. 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் அவருக்கு எதிராக எல்பிடபிள்யூ அப்பில் செய்தேன். ஆனால் அப்போது அம்பயர் அதைக் கொடுக்க மறுத்துவிட்டார்.

srisanth 1

ஆனால் அடுத்த பந்திலேயே மீண்டும் அவரை எல்பிடபிள்யூ ஆக்கி வெளியேற்றினேன். அதேபோன்று அதற்கடுத்து நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் எனது முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். மிகச் சிறந்த வீரரான அவர் என் பந்தில் ஆட்டம் இழந்தது எனக்கு மகிழ்ச்சிதான் இது குறித்து அவர் ஐபிஎல்லில் விளையாட வரும் போது கேளுங்கள். ஒருவேளை அவருக்கு என் முகம் பிடிக்கவில்லையோ என்னவோ அதனாலேயே எனது முகத்தை பார்க்க பிடிக்காமல் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார் என்றும் தெரியவில்லை என்று ஸ்ரீசாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசாந்தின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தடைக்கு பின் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்கப்பட்ட ஸ்ரீசாந்த் இந்திய அணியின் வாய்ப்புக்காக தனி பயிற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement