கொரோனா காரணமாக கலவரையறையின்றி ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே கழித்து வருகின்றனர். மேலும் உலகஅளவிலும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்று தெரியாததால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், நேற்றைய Helo Liveவில் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்:
1.கோலி மற்றும் ரோஹித் ஆகியோருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாகும் அனைத்து தகுதி கே.எல்.ராகுலுக்கு உள்ளது. அவர் 3 விதமான போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
2.முழங்கையை நன்றாக பயன்படுத்தும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
3.நான் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன்.
4.விராட், கே.எல்.ராகுல் ஆகியோர் முச்சதம் அடிக்க கூடியவர்கள்.
5.நெஹ்ரா, அகர்கர், ஸ்ரீநாத் ஆகியோர் அந்த நாட்களில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்கள்.
6.ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகிறார்கள்.
7.யாருக்கு எப்படி பந்துவீசுவது போன்றவற்றில் எனக்கு கங்குலி நிறைய அறிவுரைகளை தந்தார். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
8.விராட் கோலி ஆக்ரோசமான நிலை எனக்கு மிகவும் பிடிக்கும்.
9.சச்சினை விட சிறந்தவர் யாருமில்லை. சச்சின் மற்றும் விராட்டை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
10.கிங் ஆஃப் கிரிக்கெட் – விராட் கோலி
11.ஹாட் ஆஃப் கிரிக்கெட் – சச்சின் டெண்டுல்கர்
12.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணி.
13.டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடுகிறார்.
14.கபில் தேவ்வின் சாதனைகளை பும்ரா முடியறிப்பார்.
15.இந்திய அணியில் ஜாகீர் கான் சிறந்த தாக்குதல் பந்து வீச்சாளர்.
16.ஜாகீர் பாய் காயமடையவில்லை என்றால், கபில் தேவ்வின் சாதனைகளை உடைத்திருப்பார்.
17.மோதல் ஏற்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் மீது எனக்கு எந்த கோபமும், வருத்தமும் இல்லை.
18. பெஸ்ட் கேப்டன் கபில் தேவ்
19. பெஸ்ட் பவுலர் கபில் தேவ்
20. பெஸ்ட் ஸ்பின்னர் கும்ப்ளே
21. இந்திய அணியில் சிறந்த நண்பர் – இர்பான் பதான், ரெய்னா
22.டெஸ்ட் போட்டிகளில் எந்த அணியும் இந்தியாவை வெல்ல முடியாது.
23.ஒரு நாள் போட்டியில் தனி நபர் அதிக ரன்கள் சாதனையை ரோஹித் முறியடிப்பார்.
24.இந்திய அணியில் தோனியின் 4வது இடத்தில் தற்போது கே.எல்.ராகுல் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடுகிறார்.
25.சஞ்சு சாம்சன் சிறந்த பேட்ஸ்மேன். அவர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார்.