தோனியும் சி.எஸ்.கே அணியும் மிகுந்த வெறியுடன் இதற்காக காத்திருக்கிறார்கள் – ஸ்ரீநிவாசன் பேட்டி

Srinivasan

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையிலான சென்னை அணி மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஒரு தலை சிறந்த அணியாக அனைத்து தொடர்களிலும் செயல்பட்டு வருகிறது.

CSKShop

இந்நிலையில் சூதாட்ட புகார் காரணமாக சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு சிஎஸ்கே அணி 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்கேற்று அதே ஆண்டு நடைபெற்ற கோப்பையை வென்று சாதித்தது. அதன்பிறகு சென்ற ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை கைவிட்டாலும் இந்த வருடம் கோப்பையை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது :

பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அதனை தோனியும் சிஎஸ்கே அணியும் திறம்பட கையாண்டனர். தடைக்கு பின் வெற்றிகரமாக சிஎஸ்கே அணி திரும்பியது. அதன்பிறகு வெற்றிக்காக வெறித்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வெற்றிக்காக சி.எஸ்.கே அணி காத்துக்கொண்டிருக்கிறது. சென்னை அணிக்கு தடை வந்தபோது எனது நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தது போல உணர்ந்தேன்.

அப்போது காவல்துறை உயர் அதிகாரி என்னை தொடர்பு கொண்டு நீங்கள் பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்றார். ஆனால் அதன் பின்பு நான் பொறுமையாக காத்திருந்து பிரச்சனையை முடித்தேன். இந்த வருடம் தோனியும் சிஎஸ்கே அணியும் நிச்சயம் கோப்பையை வெல்ல வெறியுடன் இருக்கிறார்கள் என்று சீனிவாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -