இவரை அணியில் சேர்த்தா டீம் நாசமா போயிடும். ஓனரை எதிர்த்து பேசிய தோனி – அவரே வெளியிட்ட தகவல்

Srinivasan

கொரோனா வைரஸால் ஏற்படும் ஏற்பட்ட பல்வேறு இன்னல்களுக்கு பிறகு தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

ipl

இந்நிலையில் இந்த தொடரின் சிஎஸ்கே அணி வீரர்களின் தேர்வில் தோனி வைத்திருக்கும் அக்கறை குறித்து அந்த அணியின் உரிமையாளரும், முன்னாள் பிசிசிஐயின் தலைவருமான என் சீனிவசன் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நாங்கள் தற்போதைய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அவட்ஸ்டாண்டிங் வீரர் ஒருவரை சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்க முனைந்தோம்.

அது குறித்து தோனியிடமும் தெரிவித்தோம் ஆனால் தோனி உடனே அவரை அணிக்குள் கொண்டுவந்தால் அணியின் ஒற்றுமையை சீர்குலைத்து விடுவார் என்றும் அதோடு அந்த வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டாம் என்றும் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார். வெபினார் மூலம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீனிவாசன் அந்த வீரர் யார் என்ற பெயரை தெரிவிக்கவில்லை.

srinivasan

மேலும் எப்பொழுதும் அணித்தேர்வில் யாரையும் தலையிட விடாமல் தோனியே வீரர்களை தேர்வு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு தோனி சரியான வீரர்களை தேர்வு செய்வதால் தான் அவரால் எந்த அணியையும் வைத்து சிறப்பாக போட்டிகளை வெற்றிகரமாக கைப்பற்ற முடிகிறது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Dhoni

மேலும் எப்போதும் சிஎஸ்கே அணியின் முக்கிய தூணாக விளங்கும் தோனி சிஎஸ்கே அணியை அனைத்து சீசன்களிலும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார். இதுவரை அனைத்து பிளேஆப் சுற்றுக்கும் சென்ற ஒரு அணியாக சாதனையையும் சி.எஸ்.கே கேப்டன் தோனி வைத்துள்ளார். கடந்த முறை ஒரு ரன்னில் மயிரிழையில் கோப்பையைத் தவற விட்ட சென்னை சிஎஸ்கே அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.