தோனி முதல்முறை எவ்வாறு சி.எஸ்.கே அணிக்கு தேர்வானார் தெரியுமா ? – ரகசியத்தை உடைத்த சி.எஸ்.கே ஓனர்

Srinivasan

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் தற்போது அடுத்த சில வாரங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். கடந்த பத்து வருடங்களாக இவர் தான் கேப்டன்

Dhoni

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பமானது. மொத்தம் 8 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு 8 நகரங்களுக்கும் தனி அணிகள் ஒதுக்கப்பட்டு அதற்காக வீரர்கள் ஏலம் கோரப்பட்டது. இந்நிலையில் தோனியை சென்னை அணிக்காக விளையாட எப்படி தேர்வு செய்தோம் என்பது குறித்து சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்…ஒவ்வொரு அணியும் தங்களது அணியை ரசிகர்களிடையே பிரபலப்படுத்துவதற்காக தங்களது நகரத்தின் ஒரு வீரரை தேர்வு செய்ய மும்முரம் காட்டியது. அந்த வகையில் டெல்லி அணிக்கு சேவாக், மும்பை அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ,பஞ்சாப் அணி யுவராஜ்சிங், கொல்கத்தா அணிக்கு சௌரவ் கங்குலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

Srinivasan-1

இவர்கள் மட்டுமே அந்த அணி உரிமையாளர்கள் எடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். அதே நேரத்தில் நான் மகேந்திர சிங் தோனி எந்த விலை கொடுத்தாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தோம். இருப்பினும் தோனியின் ஏலத்தொகை 1.5 மில்லியன் டாலர்களை தாண்டியது. அணி மொத்தமாக 5 மில்லியன் டாலர்களை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதியும் இருந்தது.

- Advertisement -

மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் 1.65 பில்லியன் டாலர் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார் . மேலும் அவர்கள் தோனியை இந்த கட்டத்தில் எடுக்க முடியாது. அப்படி தோனியை எடுத்தால் கிட்டத்தட்ட 60% வரை செலவாகி விடும்.

srinivasan

இதனால் தோணியை உடனடியாக 1.5 மில்லியன் டாலர் கொடுத்து நான் எடுத்தேன். அதன் பின்னர் தோனி சென்னை அணிக்கு ஆடிய ஆட்டங்கள் எல்லாம் வரலாறு பேசும் என்று தெரிவித்துள்ளார் என் சீனிவாசன்.