தோனிக்கு இந்த விஷயத்தில் இருக்கும் காதல் தான். அவரை தொடர்ந்து விளையாட வைக்கிறது – சீனிவாசன் ஓபன்டாக்

Srinivasan

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடர் என்று வந்து விட்டாலே ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இதுவரை மூன்று கோப்பைகளில் கைப்பற்றியுள்ளது. மேலும் ஐந்து முறை ரன்னர் அப் பட்டத்தையும் கைப்பற்றியிருக்கிறது. இப்படி பலம் வாய்ந்த சென்னை அணி சென்ற வருடம் லீக் தொடரிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. அதை கணக்கில் கொண்டு மிகப் பலம் வாய்ந்த அணியை கட்டமைத்து இந்த வருடம் கோப்பையை வென்றே தீரவேண்டும் என்கிற எண்ணத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

Dhoni

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி கடந்த ஐபிஎல் தொடரின்போது சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக இந்த ஐபிஎல்லில் விளையாடுவாரா ? என்று எதிர்பார்த்த நிலையில் தான் 14 வது சீசனில் விளையாடுவதை உறுதி செய்த தோனி தற்போது சென்னையில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் இதுவரை 188 போட்டிகளை கேப்டனாக சந்தித்துள்ள தோனி 110 வெற்றிகள் மற்றும் 77 தோல்விகளை சந்தித்து உள்ளார்.

ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணிக்காக 197 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள தோனி 119 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். மற்றும் ஐபிஎல் கேப்டன்களை விட அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை தக்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த தோனி இம்முறை எப்படியாவது சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறார்.

Dhoni

அதனால் இந்த சீசனுக்கு ஆயத்தமாக இம்மாத துவக்கத்திலேயே சென்னை வந்த தோனி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தோனியின் பயிற்சி குறித்து தற்போது அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் சில உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி தற்போது சென்னையில் தான் இருக்கிறார். 14வது சீசனுக்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். காலையில் உள்விளையாட்டு அரங்கில், மாலையில் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி நடைபெறுகிறது.

- Advertisement -

தோனி அனைத்து விஷயங்களிலும் சரியாக செயல்படுபவர். இந்த முறையும் அவர் சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். தோனி கிரிக்கெட்டின் மீது அளவில்லாத காதல் வைத்துள்ளார், மேலும் அவர் கிரிக்கெட்டை அதிகளவு நேசிக்கிறார் என்பதால் தான் அவரால் தொடர்ந்து விளையாட முடிகிறது இந்த சீசனுக்காக தோனி அற்புதமாக தயாராகி வருகிறார் என்றும் ஸ்ரீனிவாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.