தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க இவர்கள் முயற்ற்சித்தார்கள். ஆனா நான் விடல – ஸ்ரீநிவாசன் பேட்டி

Srinivasan-1

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தோனிக்கு உலகெங்கிலுமிருந்து ரசிகர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர். மேலும் தோனி உடனான தங்களது நினைவலைகளை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

7

அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணியின் உரிமையாளரும், பிசிசிஐ நிர்வாகத்தின் முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசன் தோனி குறித்த சில நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் 2011-ஆம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தலைவராக பதவி ஆற்றினார். அந்த நேரத்தில்தான் தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் தற்போது அவர் தலைவராக இருந்த நேரத்தில் தோனியை சிலர் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முயற்சித்ததாகவும் அதில் இருந்து தான் தோனியை காப்பாற்றியது குறித்தும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலக கோப்பை வென்ற சில மாதங்களிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. அந்த தொடரில் இந்திய அணி சரியாக விளையாடவில்லை.

Srinivasan

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது அதனால் அப்போதைய தேர்வாளர்கள் தோனிக்கு பதிலாக வேறொரு கேப்டனை தேர்வு செய்யலாம் என்று கூறினார்கள். மேலும் தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் அணி கேப்டனாக தொடரக்கூடாது என்றும் முடிவு செய்தார்கள்.

- Advertisement -

Dhoni

ஆனால் நான் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் எனது பிசிசிஐ தலைவர் என்ற பதவியின் அதிகாரத்தை முழுவதுமாக பயன்படுத்தி தோனியை காப்பாற்றினேன். மேலும் அதன் பிறகு இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப தோனியும் இன்னும் பல ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டு வந்தார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.