என்னது நான் ரெய்னா பத்தி பேசுனனா ? தனது கருத்தில் பெரிய யூ-டர்ன் அடித்த ஸ்ரீனிவாசன் – விவரம் இதோ

ஐபிஎல் தொடங்க இன்னும் வெகு சில நாட்களே உள்ளன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னர் சிஎஸ்கே குறித்து அனைவரும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணிக்குள் சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சைகள் ஏற்பட்டு ரசிகர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஏற்கனவே 13 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. அதுமட்டுமின்றி ரெய்னா விலகல் என தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

Raina

மேலும் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா சொந்தப் பிரச்சினைகள் காரணமாக விலகவில்லை. சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் விலகினார் என்ற தகவலும் வெளியானது. அதுமட்டுமின்றி தோனிக்கு கொடுக்கப்பட்ட அறை போன்று பால்கனியோடு கூடிய அறை தனக்கு வழங்கப்படவில்லை என்று ரெய்னா நிர்வாகத்திடம் சண்டை விட்டதாகவும் அதன் பின்னரே அவர் அணியை விட்டு விலகி தொடரை புறக்கணித்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியானது.

அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் உரிமையாளரான சீனிவாசன் ரெய்னா குறித்து காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதன்படி அவர் தெரிவித்திருந்த கருத்தில் : ஒரு சிலர் அணியில் தாங்கள் சூப்பர்ஸ்டார் போன்று செயல்படுவதாகவும், சில நேரங்களில் வெற்றி சிலருக்கு தலை கணத்தை ஏற்படுத்திவிடுவதாகவும் ரெய்னா குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

Raina-1

இந்நிலையில் தற்போது அதிலிருந்து முழு யூடர்ன் அளிக்கும் வகையில் ஒரு கருத்து ஒன்று அவரது சார்பில் இருந்து வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் சுரேஷ் ரெய்னா துன்பம் நிறைந்த கட்டத்தில் உள்ள நிலையில் அவருக்கு அணி முழு ஆதரவாக இருக்கிறது என ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக செயல்பட்டு வருகிறோம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பம் போல் செயல்பட்டு வருகிறது. இந்த சென்னை அணியின் நிர்வாகம் எப்போதும் அவருடைய கடின காலத்தில் துணை நிற்கும் என்றும் ஸ்ரீநிவாசன் தனது கருத்து சூழலில் இருந்தே பேசினார் எனவும் அவர் ரெய்னா குறித்து பேச வில்லை என்றும் பேக் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.