சி.எஸ்.கே அணிக்கு அடுத்த ஆண்டு இவர்தான் கேப்டனாக செயல்படுவார் – உரிமையாளர் ஸ்ரீநிவாசன் பேட்டி

csk

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு மிகப்பெரிய அணியாக ஒவ்வொரு ஆண்டும் வலம் வந்து கொண்டிருக்கிறது அதன் தலைவராக இந்தியா சிமெண்ட் உரிமையாளர் சீனிவாசன் இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் தலைமையில் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மூன்று முறை ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபகாலமாக தோனி ஓய்வு குறித்த அறிக்கை வெளிவந்து கொண்டிருப்பதால் சிஎஸ்கே அணியில் தோனி இடம் பெறுவாரா ? தோனி வருவாரா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் கிரிக்கெட் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட விழாவில் சிஎஸ்கே வின் உரிமையாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பேட்டி அளித்தார்.

CSKdhoni

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் : கண்டிப்பாக தோனி அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாகவும் அவர் தொடர்வார் என்று ஸ்ரீனிவாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -