பிறந்தநாள் அன்று அன்பை பகிர்ந்த இலங்கை ரசிகர்கள். அதைவிட மேலாக அதனை ஏற்றுக்கொண்ட வில்லியம்சன் – வைரல் வீடியோ

Williamson
- Advertisement -

நியூசிலாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பு பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி கலந்து கொண்டு விளையாடியது.

- Advertisement -

அப்போது இலங்கை அணியின் பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிராக வில்லியம்சன் விளையாடினார். அப்பொழுது கேன் வில்லியம்சன் பிறந்த நாளை கொண்டாட நினைத்த இலங்கை அணியின் ரசிகர்கள் மைதானத்தின் வெளியே அவரின் பெயரை சொல்லி பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ஆர்ப்பரித்தனர். மேலும் ஒரு கேக்கை கையில் வைத்துக் கொண்டு ஒரு ரசிகர்கள் வில்லியம்சனை நோக்கி கேக் வெட்டுமாறு அழைத்தார்கள்.

உடனே ஓவர் இடைவெளியில் அந்த ரசிகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று ரசிகர்களின் மத்தியில் சென்ற வில்லியம்சன் அவர்களுடன் கேக் வெட்டி ஊட்டி மகிழ்ந்தார். இதன் மூலம் வெளி நாடுகளிலும் அதிகம் நேசிக்கப்படும் வீரரான வில்லியம்சன் கிடைக்கும் வரவேற்பை இலங்கையின் ரசிகர்கள் வெளிக்காட்டினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement