- Advertisement -
உலக கிரிக்கெட்

232 ரன்ஸ்.. மழையால் கூட எங்களை நிறுத்த முடியாது.. தொடரும் இலங்கையின் வெற்றி நடை.. திணறும் வெ.இ

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியிலேயே வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றி பெற்ற இலங்கை 2 – 1 (3) என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது.

அதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதல் முறையாக ஒரு இருதரப்பு தொடரையும் வென்று இலங்கை சாதனை படைத்தது. அந்த நிலையில் அடுத்ததாக இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 20ஆம் தேதி துவங்கியது. பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

குறுக்கே மழை:

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அலிக் அதனேஷ் 10, ப்ரண்டன் கிங் 14, கேசி கார்ட்டி 37 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் ரூத்தர்போர்ட் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து 74* (82) ரன்கள் குவித்தார். அவருடன் ராஸ்டன் சேஸ் 33* (33) ரன்கள் எடுத்ததால் 38.3 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 185-4 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது மழை வந்து போட்டியை நிறுத்தியது.

இலங்கைக்கு அதிகபட்சமாக ஹசரங்கா 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழை ஒதுங்கியது. அதைத்தொடர்ந்து இலங்கை வெற்றி பெற 37 ஓவரில் 232 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு டிஎல்எஸ் விதிமுறைப்படி உருவாக்கப்பட்டது. அப்போது மழை பெய்ததால் சுழலுக்கு பேட்டிங்க்கு சவாலாக மாறி இலங்கை அணி தடுமாற்றமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இலங்கை வெற்றி:

அதற்கு தகுந்தார் போல் பேட்டிங்கை துவங்கிய இலங்கைக்கு பெர்னாண்டோ 5, குசால் மெண்டிஸ் 13, சமரவிக்கிரமா 18 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் மதுசங்கா அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 69 ரன்கள் குவித்து இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து அவுட்டானார். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் கேப்டன் அசலங்கா 77* (71), கமிண்டு மெண்டிஸ் 30* (21) ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

இதையும் படிங்க: அந்த 2 பேருக்காக கருண் நாயர் மாதிரி.. சர்பராஸ் கானை முடிச்சுறாதீங்க.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

அதனால் 31.5 ஓவரிலேயே 234-5 ரன்கள் எடுத்த இலங்கை எங்களை மழையால் கூட நிறுத்த முடியாது என்ற வகையில் அதிரடியாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. மறுபுறம் டி20 தொடரிலிருந்து இலங்கையை நிறுத்த முடியாமல் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் இப்போட்டியில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது

- Advertisement -