- Advertisement -
உலகக் கோப்பை 2023

SL vs PAK : பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை சாதனை .. சங்கக்காராவை மிஞ்சிய மெண்டிஸ்.. கீப்பராக மாஸ் சாதனை

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. மதியம் 2:00 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு மீண்டும் குசால் பெரேரா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனால் அடுத்ததாக வந்த குசால் மெண்டிஸ் மீண்டும் அதிரடியாக விளையாடிய விரைவாக ரன்களை சேர்த்தார். அவருடன் மறுபுறம் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2வது விக்கெட்க்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிசாங்கா 51 (61) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த சமரவிக்கிரமா தனது பங்கிற்கு ரன்களை சேர்த்து இலங்கையை வலுப்படுத்தினார்.

அதிரடி சாதனை:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய குஷால் மெண்டிஸ் 14 பவுண்டரி 6 சிக்ஸருடன் அற்புதமான சதமடித்து 2வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 122 (77) ரன்கள் விளாசி அவுட்டானார். குறிப்பாக 65 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் உலகக்கோப்பை வரலாற்றில் வேகமாக சதமடித்த இலங்கை வீரர் என்ற சங்ககாரா சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2015 உலகக்கோப்பையில் வெலிங்டன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சங்ககாரா 70 பந்துகளில் 100 ரன்கள் தொட்டதே முந்தைய சாதனையாகும். அதை விட தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் 76 (42) ரன்களை 180.95 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் இந்த போட்டியில் 122 (77) ரன்களை 158.44 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த நிலைமையில் அவரைத் தொடர்ந்து வந்த அசலங்கா 1, டீ சில்வா 25, கேப்டன் சனாகா 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு பாகிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட சமரவிக்ரமாவும் சதமடித்து 11 பவுண்டரி 2 சிக்சருடன் 108 (89) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: SL vs PAK : 14 ஃபோர் 6 சிக்ஸ்.. 122 ரன்ஸ்.. பாக் பவுலர்களை பந்தாடி வரலாற்று சாதனையை நிகழ்த்திய – இலங்கை வீரர்

இறுதியில் 50 ஓவர்களில் 344/9 ரன்கள் குவித்த இலங்கை உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையும் படைத்தது. இதற்கு முன் கடந்த 2019 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 336/5 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மறுபுறம் உலகத்தரம் வாய்ந்த பவுலிங் அட்டாக் என கருதப்பட்டாலும் சுமாராகவே செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹசன் அலி 4, ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -