விட்ருந்தா 240 அடிச்சுருப்பாங்க.. இந்தியாவை கட்டிப்படுத்தியும் தோற்க இதான் காரணம்.. இலங்கை கேப்டன் வருத்தம்

Asalanga
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தம்புலா நகரில் ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் 58, ரிஷப் பண்ட் 49, ஜெய்ஸ்வால் 40, சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 214 ரன்களை துரத்திய இலங்கைக்கு துவக்க வீரர்கள் நிசாங்கா 79, குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். அதனால் 140/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற இலங்கை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:
ஆனால் அவர்களைத் தொடர்ந்து வந்த குசால் பெரேரா, கமிண்டு மெண்டிஸ், கேப்டன் அசலங்கா, சனாகா ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறினார். அதனால் 19.2 ஓவரில் 170 ரன்களுக்கு இலங்கையை சுருட்டிய இந்தியா அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரியான் பராக் 3, அக்சர் படேல் 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்நிலையில் கில் – ஜெய்ஸ்வால் ஆட்டத்தால் அதிரடியாக விளையாடிய இந்தியா 240 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்த்ததாக இலங்கை கேப்டன் அசலங்கா தெரிவித்துள்ளார். இருப்பினும் முடிந்தளவுக்கு இந்தியாவை கட்டுப்படுத்திய தங்கள் அணி பந்துவீச்சில் பவர் பிளே ஓவர்களிலும் பேட்டிங்கில் மிடில் ஆர்டரிலும் அசத்தவில்லை என்று அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதுவே தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பந்து வீச்சில் பவர் பிளே ஓவரில் நாங்கள் எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை. ஆனால் அதன் பின் ஒரு கட்டத்தில் இந்தியா 240 ரன்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் நாங்கள் மிகவும் வலுவான கம்பேக் கொடுத்தோம். இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டிருக்கலாம்”

இதையும் படிங்க: வெறும் 6 ரன்ஸ் 3 விக்கெட்ஸ்.. மேட்ச் வின்னராக நடராஜன்.. திருச்சியை வீழ்த்தி பிளே ஆஃப் சென்ற திருப்பூர் 

“குறிப்பாக மிடில் ஆர்டரில் வெளிப்படுத்திய பேட்டிங் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுக்கிறது. எங்களுடைய அணியில் தற்போது சோதனைகளை செய்து வருகிறோம். எனவே அதைப் பின்பற்றி நாங்கள் வருங்காலத்தை நோக்கி செல்ல வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டியில் ஜூலை 29ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement