- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவுக்கும், பாண்டியாவுக்கும் நியூசிலாந்து டி20 தொடரில் ஓய்வு குடுங்க.. சரியான காரணத்தை சொன்ன – சீக்கா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நாக்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பும்ரா மற்றும் பாண்டியாவுக்கு ஓய்வு குடுங்க : சீக்கா கருத்து

இந்திய அணியின் இந்த அசத்தலான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் அனைத்து போட்டிகளிலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா விளையாடக்கூடாது என்றும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அவர்கள் இருவருக்கும் ஓய்வு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரை விட நமக்கு எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரானது மிகவும் முக்கியம். ஏற்கனவே இந்திய அணியில் சில வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் போட்டியில் விளையாடிய அக்சர் பட்டேல் கூட காயத்தை சந்தித்துள்ளார்.

எனவே வீரர்களுக்கு டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக காயம் ஏற்படாமல் இருப்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்களான பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் இந்த உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சரியான ஓய்வில் இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அக்சர் படேல்.. என்ன நடந்தது? – விவரம் இதோ

எனவே அவர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள நான்கு ஆட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் டி20 உலக கோப்பை தொடரின் போது அவர்களால் முழு வீச்சில் இந்திய அணிக்காக செயல்பட முடியும் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

- Advertisement -