இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நாக்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. இதன்மூலம் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மைதானத்தில் இருந்து வெளியேறிய அக்சர் படேல் :
ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பிறகு தற்போது டி20 போட்டியில் இந்திய அணி பலமான கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் 3.3 ஓவர்கள் வீசிய நிலையில் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் அவர் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. இதன் காரணமாக அவர் இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்பது சந்தேகமாகியுள்ளது. இப்படி அக்சர் பட்டேல் மைதானத்தில் இருந்து வெளியேற காரணம் யாதெனில் :
அவர் போட்டியில் 16-வது ஓவரை வீசும் போது நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான டேரல் மிட்சல் அடித்த பந்தை தடுக்க நினைத்தபோது பந்து இடது கை ஆள்காட்டி விரலில் பலமாக தாக்கியதால் அவருக்கு தாயம் ஏற்பட்டது. மேலும் அந்த காயம் ரத்தக் கசியும் அளவிற்கு பெரிதாக இருந்ததால் அவரால் தொடர்ந்து பந்துவீச முடியாமல் வெளியேறினார்.
இதையும் படிங்க : 3 ஆவது ஆப்கனிஸ்தான் வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – முஜிபுர் ரஹ்மான்
அவருக்கு பதிலாக எஞ்சியிருந்த மூன்று பந்துகளை அபிஷேக் சர்மா வீசியிருந்தார். டி20 உலக கோப்பை தொடரானது அருகில் வந்துள்ள வேளையில் தற்போது அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்டுள்ள காயம் நிர்வாகத்தின் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் அவர் அடுத்த போட்டிக்கு திரும்புவார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.



