இலங்கை அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 27ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சூரியகுமார் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த அணியில் இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் ஆகியோர் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனெனில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமான அபிஷேக் சர்மா 2வது போட்டியில் மிரட்டலான சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் துவக்க வீரராக விளையாடிய அனுபவத்தை கொண்டு அவருக்கு 3வது போட்டியில் ஜெய்ஸ்வால் வந்த போது சுப்மன் கில் சுயநலத்துடன் தனது ஓப்பனிங் இடத்தை கொடுக்கவில்லை.
ஸ்ரீகாந்த் விமர்சனம்:
அதை விட 4வது போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கினார். ஆனால் அப்போது கேப்டனாக பெருந்தன்மையுடன் அவரை சதத்தை தொட விடாத ஜெயஸ்வால் தம்முடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். அதனால் சுயநலமாக விளையாடினார் என்ற விமர்சனங்களை சந்தித்த சுப்மன் கில் இலங்கை தொடரில் துணைக் கேப்டனாக தேர்வாகியுள்ளார்.
ஆனால் அவரை விட அதிரடியாக விளையாடி சிறந்த சாதனைகளை வைத்திருக்கும் ருதுராஜுக்கு இலங்கை தொடரில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தமக்காக ரன்களை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் சுப்மன் கில்லுக்கு தம்முடைய அணியில் இடமே கிடைக்காது என்று முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
“சுப்மன் கில் முதலில் என்னுடைய அணியிலேயே இருக்க மாட்டார். ருதுராஜ் கெய்க்வாட் எனது அணியில் தாமாக இடம் பிடிப்பார். அதே போல அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே தொடரில் தானே அடித்தார் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் சுப்மன் கில்லும் அதே தொடரில் தமக்காக ரன்கள் அடித்துக் கொண்டார். குறிப்பாக மற்ற வீரர்களை போல அவர் ஒன்றும் அதிரடியாக விளையாடவில்லை”
இதையும் படிங்க: அதை மறந்துட்டீங்களா? ஜீரோவிலிருந்து சாதிச்ச பாண்டியா என்ன தப்பு செஞ்சாரு? கம்பீருக்கு கைப் கேள்வி
“நமக்கு இடம் வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் ரன்கள் எடுத்தார். அதே போல சமீபத்திய வருடங்களில் கேஎல் ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் துணை கேப்டன்களாக செயல்பட்டார்கள். ஆனால் தற்போது கேப்டன்ஷிப் பொறுப்பில் அவர்களின் முகவரியே காண முடியவில்லை. சாய் சுதர்சன், ருதுராஜ் போன்றவர்கள் எப்போதும் உழைத்து வாய்ப்பு பெற வேண்டிய நிலையில் உள்ளனர். எல்லாரும் சுப்மன் கில்லாக முடியாது” என்று கூறினார்.



