இலங்கைக்கு எதிராக விரைவில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த காலங்களில் ஹர்திக் பாண்டியா தான் இந்தியா விளையாடிய டி20 தொடர்களில் கேப்டனாக செயல்பட்டார்.
அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையிலும் ஹர்திக் பாண்டியா தான் துணை கேப்டனாக செயல்பட்டார். அதனால் ரோகித் சர்மாவுக்கு பின் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கௌதம் கம்பீர் திடீரென சூரியகுமாரை கேப்டனாக உருவாக்கியுள்ளார்.
கைப் கேள்வி:
ஏனெனில் இதே அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வுக்குழு தான் ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக நியமித்திருந்தது. அதை விட இலங்கை டி20 தொடரில் பாண்டியா சாதாரண வீரராக மட்டுமே தேர்வாகியுள்ள நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து கௌதம் கம்பீர் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத சூழ்நிலையில் குஜராத் அணிக்கு பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்ததை மறந்து விட்டீர்களா என முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் துணை கேப்டன்ஷிப் பதவியை கூட பறிக்கும் அளவுக்கு பாண்டியா எந்த தவறையும் செய்யவில்லை என்றும் கைப் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 வருடங்கள் கேப்டனாக இருந்தார்”
“அவரது தலைமையில் முதல் வருடத்திலேயே கோப்பை வென்ற குஜராத் இரண்டாவது வருடம் ஃபைனல் சென்றது. அதே போல சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அனுபவம் கொண்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக இருந்தார். தற்போது புதிய பயிற்சியாளர் வந்துள்ளதால் திட்டம் புதிதாக இருக்கிறது. சூரியகுமார் நல்ல வீரர். நம்பர் ஒன் டி20 வீரரான சூர்யா கேப்டன்ஷிப் பொறுப்பை தோளில் சுமப்பார் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: இந்திய ஒருநாள் அணியில் சான்ஸ் கொடுக்க இதை நிரூப்பிச்சு காட்டுங்க.. பாண்டியாவுக்கு செக் வைத்த கம்பீர்
“ஆனால் அவர்கள் பாண்டியாவுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அனுபவமிக்க கேப்டன் மற்றும் பயிற்சியாளரான கம்பீர் கிரிக்கெட்டை நன்றாக தெரிந்தவர். இருப்பினும் கேப்டன்ஷிப் பெற முடியாத அளவுக்கு பாண்டியா எந்த தவறும் செய்யவில்லை. இளம் வீரர்களை வைத்து புதிய ஐபிஎல் அணிக்கு முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்வது மிகப்பெரியது. ஜீரோவிலிருந்து வேலை செய்த அவர் குஜராத்தை வெற்றி பெற வைத்தார். எனவே அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர்” என்று கூறினார்.



