அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. இதன் காரணமாக 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்து வந்த இந்திய அணியின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்ததோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.
அவரை விட நானே ஈஸியா விக்கெட் எடுப்பேன் :
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்தது என்று பலராலும் பேசப்பட்ட வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் சார்பாக சிறப்பாக பந்துவீசினர். அவர்களுக்கு மற்ற பவுலர்கள் கை கொடுக்காதாலும் இந்திய அணி சறுக்களை சந்தித்தது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்த வேளையில் அவருக்கு அடுத்தபடியாக முகமது சிராஜ் இரண்டாவதாக அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அதேபோன்று கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் குல்தீப் யாதவ் (53) முதல் இடத்திலும், முகமது சிராஜ் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். அந்த அளவிற்கு முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
இந்நிலையில் முகமது சிராஜின் பந்துவீச்சு பாராட்டக்கூடிய அளவிற்கு ஒன்றும் கிடையாது என தனது ஸ்டைலில் தமிழக முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கலாய்த்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சிராஜ் ஆஸ்திரேலியா தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளராக தான் இருக்கிறார். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் அந்த தொடரில் அதிகமாக ஓவர்களை வீசி இருக்கிறார்.
இதையும் படிங்க : இன்னும் அதை நெனச்சா எனக்கு கஷ்டமா தான் இருக்கு.. 9 வருட வலியை பகிர்ந்த – கருண் நாயர்
ஒருவேளை நானும் இதுபோன்று அதிக ஓவர்களை வீசியிருந்தால் என்னாலும் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும் என்று தனது ஸ்டைலில் சிராஜை கலாய்த்துள்ளார். ஆனாலும் தற்போதைய இந்திய அணியில் பும்ராவிற்கு அடுத்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக சிராஜ் தான் பார்க்கப்படுகிறார். எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவரே முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



