இதுமட்டும் நடக்கலனா ரோஹித் சர்மா ரிட்டயர்டு ஆயிடுவாரு.. கோலிக்கு பிரச்சனை இல்ல – சீக்கா கணிப்பு

Srikkanth
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்று கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இது நடக்கலனா ரோஹித் ஓய்வு பெற்றுவிடுவார் :

இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா பயணிக்க காத்திருக்கின்றனர். சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி வாஷ்அவுட் செய்யதால் தற்போது இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழும்பியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரது மோசமான பேட்டிங் பார்ம் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கூறுகையில் :

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாவிட்டால் அடுத்த கட்டத்தை நோக்கி யோசிக்க இந்திய அணி தொடங்கிவிடும். இதன் காரணமாக ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படாவிட்டால் அவர் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்த பின்னர் தோல்விக்கு தான் காரணம் என்று அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது ஒரு நல்ல தகுதி தான். விராட் கோலி குறித்து பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் மீண்டும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : தோனியால் மட்டும் தான் இதெல்லாம் முடியும்.. சி.எஸ்.கே அணிக்கு பலமே அவர்தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு

ஏனெனில் எப்போதுமே ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி நன்றாக விளையாடக் கூடியவர். அதனால் அவரது கம்பேக் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். ஆனால் தற்போதைக்கு அவரது ஓய்வு குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement