தற்போது 43 வயதை எட்டியுள்ள சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வந்த வேளையில் சிஎஸ்கே அணி அன் கேப்டு வீரராக தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளதால் ரசிகர்களுக்காக அவர் அடுத்த ஆண்டு விளையாட காத்திருக்கிறார்.
தோனியால் தான் இதெல்லாம் முடியும் :
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனியின் மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. அதோடு தோனி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அந்த வகையில் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட இருக்கும் தோனி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறுகையில் : இரண்டு சீசன்களுக்கு முன்புதான் தோனி ஐபிஎல் தொடரில் மோசமான நிலையை சந்தித்திருந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு வந்த அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். 20 பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அவர் சிறந்த வீரர்களின் ஒருவர். அதனால் தான் 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சென்னை அணியின் பலமாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் சென்னை அணிக்காக விளையாடி வந்தாலும் எதிர்காலத்தில் அவர் அந்த அணியை விட்டு வெளியேறும் போது நிச்சயம் அவர் சென்னை அணிக்கு வழிகாட்டியாகவும், தலைவராகவும் இருப்பார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இப்படி விளையாடுனா ரோஹித்துக்கு அது செட்டாகாது.. அவரோட டெக்னிக் தப்பு – தினேஷ் கார்த்திக் விமர்சனம்
தோனி களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சென்னை அணியை மிகச் சிறப்பாக வழி நடத்துகிறார். அவரையும் சிஎஸ்கே அணியையும் தனித்தனியாக பிரிக்க முடியாது என்றே தான் நினைப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



