இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது சூப்பர் 8 சுற்றினை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த சூப்பர் 8 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி நிச்சயம் இறுதிப்போட்டி வரை முன்னேறும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இவருக்கு தான் தொடர்நாயகன் விருது குடுக்கணும் : சீக்கா கருத்து
அந்த வகையில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை எதிர்த்து விளையாட இருக்கும் இந்திய அணி நிச்சயம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது. அதோடு சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பை என்பதனால் இறுதி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் நாயகன் விருதை தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு தான் வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சை எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் சரியாக கனித்து விளையாட முடியவில்லை. பந்து நேராக வருகிறதா? கூக்லியா? திரும்புகிறதா? என்று தெரியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர்.
இதையும் படிங்க : 4 பால் டாட் பால் ஆனாலும் பரவாயில்ல.. அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய – சுனில் கவாஸ்கர்
சில ஆண்டுகளுக்கு முன்பு பும்ராவை பார்த்து எவ்வாறு பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்களோ அதேபோன்று தற்போது வருண் சக்கரவர்த்தியை பார்த்து தடுமாறி வருகிறார்கள். வருண் சக்கரவர்த்தி தான் இந்த தொடர்நாயகன் விருதினை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர் ஒவ்வொரு போட்டியிலுமே விக்கெட் வீழ்த்துவது மட்டுமின்றி ரன்களையும் குறைவாக விட்டுக் கொடுத்து வருகிறார் என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.



