4 பால் டாட் பால் ஆனாலும் பரவாயில்ல.. அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய – சுனில் கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்று போட்டிகளின் முடிவில் தாங்கள் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

அபிஷேக் சர்மாவுக்கு ஆறுதல் சொன்ன : சுனில் கவாஸ்கர்

அடுத்ததாக சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்யும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு ஒரே ஒரு பின்னடைவாக பார்க்கப்படுவது நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் பேட்டிங் பார்ம் தான்.

- Advertisement -

ஏனெனில் கடந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் சொதப்பி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்று ஆட்டங்களில் தான் விளையாடிய மூன்று போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி உள்ளார். இதன் காரணமாக அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து தருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா உண்மையிலேயே அற்புதமான ஒரு வீரர். அவர் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து அவருக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். இந்த தொடரில் அவர் முதல் போட்டியில் இருந்து சிறப்பாக துவங்கி இருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அவர் அடுத்தடுத்த ஆட்டங்களில் டக் அவுட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறாது.. இதுதான் காரணம் – முகமது ஆமீர் விமர்சனம்

எனவே தற்போதைக்கு அவர் மீது எந்த ஒரு அழுத்தத்தையும் வைக்காதீர்கள். அவர் போட்டியின் முதல் ஓவரிலேயே பவுண்டரியோ, சிக்சரோ அடிக்காமல் ஒரு சிங்கிள் எடுத்து ரன் கணக்கை துவங்கினால் போதும் அதன் பின்னர் பெரிய ஷாட்டுகள் எளிதாக வரும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement