திலக் வர்மாவுக்கு பதிலா அவரை விளையாட வையுங்க.. அதுதான் கரெக்ட் – ஸ்ரீகாந்த் பேச்சு

Kris Srikkanth
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக ஜிம்பாப்வே அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

திலக் வர்மாவுக்கு பதில் அவரை சேருங்க : சீக்கா ஸ்ரீகாந்த்

இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமெனில் அடுத்ததாக நடைபெறயிருக்கும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் தற்போதைய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சேஸிங்கில் சிரமப்பட்டு வருவதால் இனிவரும் போட்டிகள் இந்திய அணிக்கு சவாலாக அமைய வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போதைய இந்திய அணியின் திலக் வர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : தற்போதைய நிலையில் சஞ்சு சாம்சன் அணிக்குள் வரவேண்டும் என்றால் திலக் வர்மாவை நீக்கியாக வேண்டும்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்த திலக் வர்மா அணியில் நீடிக்க தகுதியற்றவர் என்று நினைக்குறேன். விராட் கோலி போன்று சேஸிங்கில் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு வீரர் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாக பார்க்கிறேன். அவர் இல்லாமல் இந்திய அணி சேஸிங்கில் தடுமாறி வருகிறது என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை போட்டிகளில் கிரிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை முறியடித்த – சிம்ரன் ஹெட்மயர்

இந்த சூப்பர் 8 சுற்று போட்டிக்கான இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி எதிர்வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதன்காரணமாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் சென்னை வந்தடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement