சின்னப்பிள்ளை தனமாக யோசிக்காதீங்க. இதுலாம் ஒரு மேட்டரே இல்ல – கிளார்க்கிற்கு பதிலடி கொடுத்த ஸ்ரீகாந்த்

Srikkanth
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களுடனும், விராட் கோலியுடன் வார்த்தைப் போரில் ஈடுபட பயப்படுகிறார்கள் என்ற கருத்தினை ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதாவது ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் எதிர் அணி வீரர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு அவர்களின் கவனத்தை திசைதிருப்பி வெற்றி பெறுவார்கள்.

Clarke

ஆனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதுபோன்ற ஸ்லெட்ஜிங் அதிக அளவில் செய்வதில்லை. மேலும் ஐபிஎல் போட்டி வந்த பிறகு இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் அடிபணிந்து போகிறார்கள். மேலும் இந்திய அணியின் வீரரான விராட் கோலியிடம் ஸ்லெட்ஜிங் செய்ய தவறுகிறார்கள். ஏனெனில் அவரை எதிர்த்து வார்த்தை போரில் ஈடுபடும் போது ஐபிஎல் காண்ட்ராக்ட் கிடைக்காமல் போகும் என்பது போல பயப்படுகிறார்கள் என்று தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

அவரின் இந்த கருத்து ஆஸ்திரேலிய அணிக்குள்ளேயே சற்று புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆகியோர் நேரடியாக கிளார்க் கூறியது தவறு என்றும் மறுப்புத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் காண்ட்ராக்ட்க்காக நாங்கள் ஒருபோதும் அதுபோன்று செய்ததில்லை. இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டி எப்பொழுதும் சுவாரசியமான ஒன்றாகவே இருக்கும் அவர்களை கண்டு நாங்கள் பயந்ததில்லை என்று கூறுகின்றனர்.

paine 1

இந்நிலையில் கிளார்க்கின் இந்த கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் கூறுகையில் : வெறும் வார்த்தை போரில் ஈடுபட்டு எதிரியை வீழ்த்துவது என்பது கடினம். அதுவும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணி எப்போதும் எதிரணியை வார்த்தை போரில் ஈடுபட வைத்து அவர்களின் கவனத்தை சிதைக்கிறது. ஆனால் இந்திய அணியுடன் அவர்கள் அடைந்த தோல்வி அப்படி நேர்ந்ததில்லை.

- Advertisement -

இந்திய அணி சிறப்பாக விளையாடியே ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது. அதனால் ஆஸ்திரேலியா அடைந்த தோல்வி தோல்வி தான். அவருடைய கருத்து கேலிக்கூத்தானது மேலும் இதுபோன்ற யோசனை அவருக்கு ஏன் வந்தது என்றும் தெரியவில்லை. இந்த விடயம் குறித்து நாசர் உசேன் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய வீரர்கள் இடம் கேட்டால் ஸ்லெட்ஜிங் ஒருபோதும் ரன்களை கட்டுப்படுத்தாது என்றும் விக்கெட்டுகளை வீழ்த்தாது என்றும் கூறுவார்கள்.

paine 2

நீங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும். மேலும் விக்கெட்டுகள் வீழ்த்த சிறப்பாக பந்து வீச வேண்டும். டார்கெட்டை எட்ட சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். என்னுடைய கருத்தின்படி இவை இரண்டை செய்தால் மட்டுமே ஒரு அணிக்கு வெற்றி கிடைக்கும். அதை தவிர்த்து வார்த்தைப் போரில் ஈடுபடுவது ஆட்டத்தில் சுவாரசியம் அதிகரிக்குமே தவிர மற்றபடி எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்று ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement