சஞ்சு சாம்சன் இப்படியே ஆடுனா அவரோட இடம் ஜெய்ஸ்வாலுக்கு போயிடும் – எச்சரித்த சீக்கா ஸ்ரீகாந்த்

Srikkanth-Samson
- Advertisement -

அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான பந்துவீச்சை செயல்பாட்டை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் வீழ்த்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

சஞ்சு சாம்சனின் இடத்திற்கு வந்துள்ள ஆபத்து :

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரின் ஐந்து போட்டியிலும் துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் வெறும் 51 ரன்களை மட்டுமே குவித்தார். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் 26 ரன்கள் அடித்த அவர் அடுத்த நான்கு போட்டிகளில் சொற்பரன்களில் ஆட்டோமிழந்து ஏமாற்றத்தை அளித்திருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் மீண்டும் டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் திறமையான வீரராக இருந்தாலும் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவே முயற்சிக்கிறார் என்றும் நிலையான இன்னிங்சை அவர் விளையாட முடியாமல் போவது அவரது இடத்திற்கு ஆபத்தாக அமையும் என தமிழக முன்னாள் வீரரான கிருஷணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் அதிரடியான வீரர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் அவர் டி20 அணியில் ஐந்தாவது முறையாக வாய்ப்பை இழக்க போகிறார் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் இடம் பிடிக்க ஏகப்பட்ட இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில் ஒருவேளை தொடர்ச்சியாக ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறி வரும் சஞ்சு சாம்சன் நிச்சயம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது நிரந்தர இடத்திற்காக காத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரின் முதல் சில போட்டிகளை சஞ்சு சாம்சன் தவறவிட வாய்ப்பு – என்ன ஆனது சாம்சனுக்கு?

எனவே இனியும் சஞ்சு சாம்சன் இதேபோன்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவருக்கு நன்றி கூறிவிட்டு யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பக்கம் இந்திய அணி சென்றுவிடும். அதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பதிலாக நேரடியாக ஜெய்ஸ்வால் அந்த இடத்தை பிடித்து விடுவார் என்று தான் கருதுவதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement