தோனி இதனை ஏன் செய்யவில்லை. பழைய தோனி இப்படி இருந்து நான் பார்த்ததில்லை – ஸ்ரீகாந்த் ஓபன் டாக்

Srikkanth
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan 1

இந்நிலையில் சென்னை அணியின் தோல்வி தொடர் தோல்வி குறித்தும், தோனியின் பேட்டிங்கும் குறித்தும் பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் கூறுகையில் : பல பேட்ஸ்மேன்கள் பார்ம் அவுட் ஆகி ரன்கள் சேர்க்க தடுமாறுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிலிருந்து மீண்டுவர அதிரடியாக பந்தை அடித்து விளையாட வேண்டும். தோனியும் இந்த சீசனில் அவரது பழைய அதிரடி ஆட்டத்தை ஆடி இருக்க வேண்டும்.

Dhoni-1

பழைய தோனி வந்த எந்தவித பயமுமின்றி அடித்து நொறுக்கும் குணமுடையவர். அப்படித்தான் அவரது அணுகுமுறை இந்த சீசனில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை அணியில் ஆடும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் ? என்பது குறித்தும் அவர் கேள்வியெழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement