நூர் அகமதுவின் சிறப்பான பந்துவீச்சுக்கு தோனி தான் காரணம்.. பவுலிங் கோச் – ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேட்டி

Sridharan Sriram and Noor
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-வது போட்டியில் விளையாடியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தியிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது.

நூர் அகமதுவுக்கு உதவிய எம்.எஸ் தோனி : ஸ்ரீதரன் ஸ்ரீராம்

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய கொல்கத்தா அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே குவிக்க சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அகமது 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் 3 ஆட்டங்களில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்த அவர் கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அதிலும் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதின் மூலம் அவர் 50 விக்கெட்டுகளையும் ஐ.பி.எல் போட்டிகளில் கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் இப்படி நூர் அகமது மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த மிக முக்கியமான காரணமே தோனி அவருக்கு வலைப்பயிற்சியின் போது கொடுத்த அறிவுரைகள் தான் என பந்துவீச்சு பயிற்சியாளரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் அவர் கூறியதாவது : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியின் போது தோனி நீண்ட நேரம் நூர் அகமதுவிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லெக் ஸ்பின் பந்துவீச்சை எவ்வாறு சிறப்பாக வீச வேண்டும் என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை அவருக்கு வழங்கினார். தோனி அவருக்கு கொடுத்த ஆலோசனைகள் களத்தில் நூர் அகமது சிறப்பாக செயல்பட உதவியதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : பஞ்சாப் அணிக்கெதிரான நாளைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம்? – வெளியான தகவல்

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் எந்த வேகத்தில், எந்த லெந்த்தில் பந்துவீச வேண்டும்? என்பது போன்ற சில மாற்றங்களையும் தோனி அவருக்கு வழங்கியிருந்தார். அப்படி கிடைத்த சில அறிவுரைகளின் மூலம் நூர் அகமது சிறப்பாக பந்து வீசியதையும் களத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது என ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement