- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜஸ்ப்ரீத் பும்ரா மாதிரி வருண் சக்கரவர்த்தியும் இந்த விடயத்தில் அசத்துறாரு – ஸ்ரீதரன் ஸ்ரீராம் பாராட்டு

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் தனது வாய்ப்பை உறுதி செய்து விட்டார் என்று கூறலாம். ஏனெனில் சமீபத்தில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் கம்பேக் கொடுத்த அவர் தொடர்ச்சியாக விக்கெட் வேட்டை நடத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார்.

பும்ராவை போல வருண் சக்கரவர்த்தியும் அசத்துறாரு : ஸ்ரீதரன் ஸ்ரீராம் பாராட்டு

இதன் காரணமாக அடுத்தடுத்த தொடர்களிலும் இந்திய டி20 அணியில் முக்கிய வீரராக இடம்பிடித்து விளையாடி வருகிறார். அந்த வகையில் தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்டு டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து விளையாட இருக்கிறார்.

- Advertisement -

அந்தவகையில் எதிர்வரும் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுப்பார் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் இந்த தென்னாபிரிக்க டி20 தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் வருண் சக்கரவர்த்தியை ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கேப்டன் சூர்யகுமார் யாதவ் வருண் சக்கரவர்த்தியை அற்புதமாக பயன்படுத்தி வருகிறார். வருண் சக்கரவர்த்தியும் முன்பை போல இல்லாமல் தற்போது இக்கட்டான நேரங்களில் கடினமான ஓவர்களையும் வீசி வருகிறார். அதோடு அப்படி வீசும் ஓவர்களிலும் கூட விக்கெட் எடுத்து போட்டிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வீரராக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக கேப்டன் சூரியகுமார் யாதவ் அவரை பவர்பிளேவில் பயன்படுத்துவது மட்டுமின்றி போட்டியின் இறுதி நேரத்திலும் 17-வது மற்றும்18-ஆவது ஓவர்களை கூட வீச தைரியமாக அவரிடம் பந்தை கொடுக்கிறார். அந்த நேரத்திலும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார்.

இதையும் படிங்க : டி20 போட்டியில் அதிக விக்கெட் எடுத்தும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏற்பட்டுள்ள நிலை – எல்லாத்துக்கும் கம்பீர் தான் காரணம்

என்னை பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ராவை போல போட்டியின் எந்த நேரத்திலும் வருண் சக்கரவர்த்தி விக்கெட் எடுக்கும் திறனை வைத்துள்ளார். அதன் காரணமாகவே அவர் டி20 போட்டிகளில் அசைக்க முடியாத பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வருவதாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -