தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக பாதியில் தேர்வானது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 3 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் கடைசி 2 போட்டிகளுக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 2வது போட்டியில் நேரடியாக பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு பெற்றார்.
அதற்கு சுனில் கவாஸ்கர் போன்ற சில முன்னால் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் 45 மாதங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வாசிங்டன் சுந்தர் முதல் நாளிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்து அபார கம்பேக் கொடுத்தார். மேலும் தன்னுடைய தேர்வு பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர் வாய்ப்பளித்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு நன்றியும் தெரிவித்தார்.
கம்பீர் தேர்வு:
இந்நிலையில் இந்திய அணியில் மணிகட்டு (ரிஸ்ட்) ஸ்பின்னர்களுக்கு பதிலாக வாசிங்டன் சுந்தர் போன்ற விரல் (பிங்கர்) ஸ்பின்னர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கௌதம் கம்பீர் நினைப்பதாக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். அதனாலேயே வாஷிங்டன் சுந்தரை அவர் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் ஸ்ரீராம் கூறியுள்ளார். மேலும் கம்பீர் இருக்கும் வரை 3 வகையான ஃபார்மட்டிலும் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது. “கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் வாஷிங்டன் சுந்தர் 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார். ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் குறைவாக பயன்படுத்தப்படுவதாக கம்பீர் கருதுகிறார். அத்துடன் பன்முகத்தன்மை கொண்ட சுந்தர் பேட்ஸ்மேனாகவும் பவுலராகவும் வெற்றியில் நிறைய பங்காற்றும் திறமையை கொண்டிருப்பதாக கம்பீர நம்புகிறார்”
தமிழக வீரருக்கு ஆதரவு:
“கம்பீர் எப்போதும் பன்முகத்தன்மை கொண்ட வீரர்களை விரும்புகிறார். அந்த இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் பொருந்துகிறார். அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கம்பீருக்கு தெரியும். குறிப்பாக இந்திய பிட்ச்களில் மணிக்கட்டு ஸ்பின்னர்களை விட விரல் ஸ்பின்னரை கம்பீர் விரும்புகிறார். அதனாலேயே வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது புத்திசாலித்தனமான நகர்வு”
இதையும் படிங்க: தயாராகும் 333 ரன்ஸ் ஆஸி போன்ற தோல்வி.. இந்தியா 107/7.. 12 வருட சாதனையை உடைக்கப் போகும் நியூஸிலாந்து?
“கடந்த ஐபிஎல் தொடருக்குப்பின் ஓவர் ஸ்பின் பந்துகளில் கவனம் செலுத்துங்கள் என்று வாஷிங்டன் சுந்தருக்கு ஆலோசனை தெரிவித்தேன். ஆர்சிபி அணியில் வேலை செய்த போதும் இப்போதும் அவருக்கு அதே ஆலோசனையை கொடுக்கிறேன். ஏனெனில் உயரமாக இருக்கும் அவருக்கு பவுன்ஸ் மிகப்பெரிய பலமாக இருக்கும். உங்களிடம் நல்ல ஓவர் ஸ்பின் இருக்கும் போது உங்களால் ஆடுகளத்தில் நல்ல உதவியை பெற முடியும். அதைத்தான் புனேவில் அவர் செய்தார்” என்று கூறினார்.



