பும்ரா மன்னிப்பு கேட்டும் அவர் மதிக்கல. அதன் விளைவு தான் இந்திய அணி திருப்பி அடித்தது – கோச் ஸ்ரீதர் பேட்டி

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாம் நாளில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்தினார்.

bumrah 1

- Advertisement -

இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய ஆண்டர்சன் ஹெல்மெட், கை, கிளவுஸ் என உடம்பின் பல்வேறு இடங்களில் அடி வாங்கினார். இங்கிலாந்து அணியின் கடைநிலை பேட்ஸ்மேனுக்கு இவ்வாறு தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசியது விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அஸ்வினுடன் யூடியூப் சேனலில் கலந்துரையாடிய இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் இந்த விவகாரம் குறித்து கூறுகையில் :

பும்ரா ஒரு சவாலான வேகப்பந்துவீச்சாளர். அவர் வேண்டும் என்றே யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பதை விரும்பமாட்டார். ஆண்டர்சனுக்கு எதிராக பவுன்சர் பந்தை வீசிய போதும் அவர் விக்கெட்டை விட்டுக் கொடுக்கவில்லை. ஆண்டர்சன் உடல் முழுவதும் பந்து தாக்கியது. பின்னர் ஆட்டம் முடிந்து இரு அணி வீரர்களும் ஓய்வறைக்கு திரும்பும்போது ஆண்டர்சனின் முதுகில் தட்டிக்கொடுத்து பும்ரா மன்னிப்பு கேட்டார்.

IND 1

மேலும் நான் இதை வேண்டுமென்றே செய்யவில்லை சாரி என தெரிவித்தார். ஆனாலும் அதை ஆண்டர்சன் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக ஒதுக்கினார். இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடினர் என்று ஸ்ரீதர் கூறியுள்ளார்.

bumrah

இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் போது பும்ரா மற்றும் ஷமிக்கு எதிராக ஆண்டர்சன் அதேபோன்று பவுன்சர் பந்துகளை வீசினாலும் அதனை இருவரும் அசாதாரணமாக எதிர்கொண்டு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement