6 ரன்ஸ்.. 10 முறை டக் அவுட்டாவதில் அப்ரிடியை மிஞ்சிய பாபர் மோசமான சாதனை.. இலங்கை ஃபைனலுக்கு தகுதி

PAK vs SL
- Advertisement -

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் நவம்பர் 27ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 20 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 184/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 76 (48), குசால் மெண்டிஸ் 40 (23), ஜனித் லியனகே 24* (24), கேப்டன் சனாகா 17 (10) ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

இலங்கை வெற்றி:

அடுத்ததாக 185 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு ஃபர்கானை 9 (7) ரன்களில் காலி செய்த சமீரா அடுத்து நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாமை சில்வர் டக் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த பகார் ஜமானையும் 1 ரன்னில் அவுட்டாக்கி தெறிக்க விட்டார். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த சாய்ம் ஆயுப் 27 (18) ரன்களில் அவுட்டானதால் 43/4 என பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறியது.

அப்போது மிடில் ஆர்டரில் கேப்டன் சல்மான் ஆகா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருக்கு எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த உஸ்மான் கான் 33 (23) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்து அதிரடியாக அடிக்க முயற்சித்த முகம்மது நவாஸ் 27 (16) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

பாபர் அசாம் மோசமான சாதனை:

அடுத்து வந்த ஃபஹீம் அசரப் 7 (6) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் தொடர்ந்து போராடிய சல்மான் அரை சதமடித்து 63* (43) ரன்கள் எடுத்தார். இருப்பினும் 20 ஓவரில் பாகிஸ்தானை 178/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்த இலங்கை புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது.

இதையும் படிங்க: பேசாம இந்தியாவை விட்டுட்டு அந்த நாட்டுக்கு போய் ஆடுங்க.. கம்பீர் தப்பை ஒத்துக்கனும்.. ஸ்ரீகாந்த் விமர்சனம்

அதனால் முதலிடம் பிடித்த பாகிஸ்தானை வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இலங்கை தகுதி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சமீரா 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் காரணமாக ஜிம்பாப்வே தொடரிலிருந்து வெளியேறியது. இப்போட்டியில் டக் அவுட்டானதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான பாகிஸ்தான் வீரர் என்ற மோசமான சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார் அந்தப் பட்டியல்:
1. பாபர் அசாம்/சாய்ம் ஆயுப் : தலா 10*
2. ஷாஹித் அப்ரிடி: 8
3. கம்ரான் அக்மல்/முகமது நவாஸ்: 7

Advertisement