99 ரன்ஸ்.. மெண்டிஸ் அசத்தல்.. வங்கதேசத்தின் 23 வருட கனவை மீண்டும் பொய்யாக்கிய இலங்கை.. சொந்த மண்ணில் வெற்றி

SL vs BAN 3
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. அதனால் சமநிலையில் இருந்த அத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ஜூன் எட்டாம் தேதி பல்லக்கேல் மைதானத்தில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு மதுஷ்கா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் நிதானமாக விளையாடிய நிசாங்கா 35 (47) ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக கமிண்டு மெண்டிஸ் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

மெண்டிஸ் அசத்தல்:

இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய குஷால் மெண்டிஸ் அரை சதத்தை அடித்தார். அடுத்ததாக வந்த அசலங்கா அவருடன் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 124 (114) ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை அடித்து 58 (68) ரன்கள் குவித்தார். மறுபுறம் தொடர்ந்து வங்கதேசத்தை சிறப்பாக எதிர்கொண்ட குசால் மெண்டிஸ் 18 பவுண்டரியுடன் சதத்தை அடித்து 124 (114) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில் ஹசரங்கா 18*, சமீரா 10* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இலங்கை 285/7 ரன்களை எடுத்து அசத்தியது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தஸ்கின் அகமது, மெகதி ஹசன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய வங்கதேசத்திற்கு பர்வேஸ் ஹொசைன் 28, தன்சித் ஹசன் 17, நஜ்முல் சாண்டோ 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

இலங்கை வெற்றி:

மிடில் ஆர்டரில் டௌஹித் ஹ்ரிடாய் 51 ரன்கள் எடுத்த போதிலும் கேப்டன் மெகதி ஹசன் 28, ஜாகிர் அலி 27, சமீம் ஹொசைன் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களையும் வந்த வாக்கிலேயே பெவிலியன் அனுப்பிய இலங்கை 39.4 ஓவரில் வங்கதேசத்தை 186 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துஷ்மந்தா சமீரா, அசிதா பெர்னான்டோ தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதையும் படிங்க: லார்ட்ஸ் பிட்ச்சில் இங்கிலாந்து அவரை களமிறக்கினாலும் இந்தியா இதை அட்ஜஸ்ட் செஞ்சு ஜெய்க்கும்.. கோட்டக் பேட்டி

அதனால் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை 2 – 1 என்ற கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து கோப்பையை வென்றது. அதன் காரணமாக இலங்கை மண்ணில் ஒரு ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற வங்கதேசத்தின் 23 வருட கனவு மீண்டும் பொய்யானது. இலங்கையில் 2002 முதல் இதுவரை விளையாடிய 7 ஒருநாள் தொடர்களில் வங்கதேசம் 5 தோல்விகளை சந்தித்தது. 2 தொடர்கள் மழையால் 1 – 1 (3) என்ற கணக்கில் டிராவில் முடிந்தன.

Advertisement