ஆஸ்திரேலியாவில் தரம் கெட்ட வேலையை செய்த இலங்கை வீரர், போலீஸ் பிடித்து ஜெயிலில் போட்டதால் பரபரப்பு – நடந்தது என்ன

SL vs PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அசத்தலாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் முக்கியமான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. அதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்காமல் வெளியேறி அதிர்ச்சியை சந்தித்த நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. முன்னதாக இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய 16 அணிகளில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை அசால்டாக தோற்கடித்து ஆசிய சாம்பியனாக களமிறங்கிய இலங்கை முதல் சுற்றில் அசத்தலாக செயல்பட்டாலும் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அதனால் ஏமாற்றுத்துடன் நாடு திரும்புவதற்காக அந்த அணியினர் தயாராகிய நிலையில் கடைசி நேரத்தில் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவை ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஆம் இத்தொடரில் பங்கேற்பதற்காக சிட்னி நகரில் இருக்கும் ரோஸ் பே ஹோட்டலில் இலங்கை வீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்த நிலையில் இந்த உலகக் கோப்பையின் ஆரம்பகட்ட போட்டிகளில் களமிறங்கிய தனுஷ்கா குணதிலகா முதல் சுற்றில் சந்தித்த காயத்தால் எஞ்சிய தொடரில் பங்கேற்கவில்லை என்றாலும் இலங்கை அணியுடன் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்.

- Advertisement -

பாலியல் தொந்தரவு:
அந்த வகையில் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் 29 வயதுடைய ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கடந்த வாரம் அந்தப் பெண் புகார் அளித்ததாக தெரிகிறது. இது பற்றி நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தனுஷ்கா குணதிலகா மீது தவறு இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அவரை நியூ சவுத் வேல்ஸ் மாகாண போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்ததாக செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இது பற்றி காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு. “ஆன்லைன் டேட்டிங் ஆப் வாயிலாக அவரது பழக்கத்தைப் பெற்ற அந்தப் பெண் பல நாட்களாக பேசிய பின் நேரில் சந்தித்துள்ளார். குறிப்பாக நவம்பர் 2ஆம் தேதி புதன் கிழமையன்று நிகழ்ந்த அந்த சந்திப்பின் போது அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளின் ஒரு பகுதியாக ரோஸ் பேயில் உள்ள முகவரியில் நேற்று சிறப்புப் போலிசாரால் குற்றச் சோதனை நடத்தப்பட்டது”

- Advertisement -

“அந்த விசாரணைகளைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை 6 நவம்பர் 2022) 1 மணிக்கு முன்னதாக சிட்னி சசெக்ஸ் தெருவில் உள்ள ஹோட்டலில் 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சிட்னி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் மீது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இலங்கையைச் சேர்ந்த அவர் இன்று AVL [ஒலி காட்சி இணைப்புகள்] வாயிலாக பரமட்டா பிணை நீதிமன்றத்தில் ஆஜரான பின் ஜாமீன் மறுக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு. “சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டதை இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்துகிறது. மேலும் திரு. குணதிலகா நாளை (7 நவம்பர் 2022) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நீதிமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகளை இலங்கை வாரியம் உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும் ஐசிசியுடன் கலந்தாலோசித்து இந்த விவகாரம் குறித்து ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும் மற்றும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement