எங்க வந்து யார்கிட்ட.. 42க்கு ஆல் அவுட்.. ஓடவிட்ட தெ.ஆ.. இந்தியாவை கலாய்த்த இலங்கை மோசமான சாதனை

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 27ஆம் தேதி டர்பன் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 70, கேசவ் மகாராஜ் 24 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணிக்கு அதிகபட்சமாக லகிரு குமாரா, அஷிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

ஓடவிட்ட தென் ஆப்பிரிக்கா:

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கையை தெறிக்க விடும் வகையில் பந்து வீசிய தென்னாப்பிரிக்கா வெறும் 13.5 ஓவரில் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. குறிப்பாக முதல் நாளில் மழை பெய்ததால் டர்பன் ஆடுகளம் கொஞ்சம் வேகத்துக்கு சாதகமாக இருந்தது. அதில் துல்லியமாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க பவுலர்கள் இலங்கையை எங்க ஊரில் வந்து யார்கிட்ட என்ற வகையில் வெறும் 42க்கு சுருட்டி வீசினார்கள்.

அதற்கு பதில் சொல்ல முடியாத இலங்கைக்கு நிசாங்கா 3, கருணரத்னே 2, சண்டிமால் 0, மேத்யூஸ் 1, கேப்டன் சில்வா 7, குசால் மெண்டிஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 13, குமரா 10* ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்கோ யான்சென் 6.5 ஓவரில் 13 ரன்களை மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

மோசமான சாதனை:

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 50 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி இலங்கை வரலாறு காணாத மோசமான சாதனை படைத்தது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து இலங்கை மோசமான சாதனையும் படைத்தது. இதற்கு முன் 1994இல் கண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 71க்கு ஆல் அவுட்டானதே இலங்கையின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இதையும் படிங்க: ஆஸியை இப்படி பாத்ததில்ல.. அதுக்கு அப்றமும் இந்தியா கம்பேக் கொடுத்துட்டாங்க.. கோலி பற்றியும் ஏபிடி பேட்டி

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 46க்கு ஆல் அவுட்டான போது சம்பந்தமின்றி இந்திய அணியை இலங்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர். தற்போது அவர்களுடைய அணி அதை விட குறைவாக அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளது. இதை அடுத்து 149 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement