“ஒட்டக பேட்” உடனே ஹைதராபாத்துக்கு வாருங்கள். விமர்சையாக ரஷீத் கானை அழைத்த – சன் ரைசர்ஸ்

Rashid-khan

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் கடந்த சில வருடங்களாகவே தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைத்து அணிகளின் பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வருகிறார். மேலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் சர்வதேச டி20 போட்டிகளில் ஜொலிப்பது மட்டுமின்றி அனைத்து நாட்டில் நடைபெறும் டி20 லீக்களிலும் பங்குபெற்று முக்கிய வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Rashid khan 1

ரஷீத் கான் இதுவரை டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 240 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் தற்போது கவனம் செலுத்திவரும் ரஷித் கான் தற்போது பிபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் புதுவிதமான கிரிக்கெட் பேட் ஒன்றை வைத்துக் கொண்டு விளையாடி வருகிறார்.

ரஷீத் கான் தற்போது பயன்படுத்தும் பேட்டின் பின்புறம் ஒட்டகத்தின் முதுகு போல வளைந்து வளைந்து இருக்கும் பேட்டை பயன்படுத்துகிறார். இதனை ஆஸ்திரேலிய ரசிகர்கள் அந்த பேட்டிற்கு ஒட்டக பேட் என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஒட்டகப் பேட் குறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

ந்நிலையில் இந்த ட்வீட்டை சன்ரைசர்ஸ் அணி பதில் ட்வீட் செய்து 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் இதே பேட்டுடன் வந்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ரஷித் கான் இந்த ஆண்டும் அந்த அணிக்காக விளையாட இருப்பதால் அவருக்காக இந்த பதிவை இட்டுள்ளது. மேலும் சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரராக அவர் பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -