சன் ரைசெஸ் ஹைதராபாத் அணி இன்று இரவு மும்பை அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் வேக பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பங்கு பெற மாட்டார் என்று அந்த அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரரான வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத் அணியின் அறிவிப்பைபடி கடந்த போட்டியின் போது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் புனேஸ்வர் குமாருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தபட்டுள்ளதாம்.
இதுபற்றி வில்லியம்சன் மேலும் தெரிவிக்கையில் காயம் காரணமாக இதுவரை ஆடமால் இருந்த தொடக்க ஆட்டக்காரரான தவான் சற்று உடல் நலம் தெரிவருகிறார். பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தின் போது முட்டியில் ஏற்பட்ட காயத்தால் தவானால் சென்னை அணியுடனான ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது.இன்று நடக்க போகும் போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை என்றாலும் அவருக்கு பதிலாக ரஷீத் கான் உள்ளார் . அவர் கடந்த எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
மேலும் அனைத்து பந்து வீச்சாளர்களுமே ஒரு சில போட்டிகளில் பதம் பார்க்க படுவார்கள். அதே போன்று தான் கடந்த போட்டிகளில் விளையாடி ரஷீத் கான் நிறைய படங்களை கற்றுக் கொண்டுள்ளார் .கடந்த ஒரு சில போட்டிகளில் ரஷீத் கானின் பந்துகளை ஒரு சில வீரர்கள் விளாசி தள்ளினர் . ஆனால் ரஷீத் கண்டிப்பாக அதிலிருந்து மீண்டு வந்து கண்டிப்பாக சிறப்பாக பந்து வீசுவார் .
சிறந்த பிளேயரான ரஷீத் கண்டிப்பாக மீண்டும் நல்ல பார்மிர்க்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹைத்ராபாத்தின் கேப்டன் வில்லியம்சன் .நடந்து முடிந்த 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது ஹைத்ராபாத் அணி . ஆனால் 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்று நம்பிக்கை இழந்து நிற்கும் மும்பை அணி இந்த போட்டியில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று படு மும்மரமாக இருக்கிறது.