சி.எஸ்.கே அணியை சேப்பாக்கத்தில் வைத்து வீழ்த்திய சன் ரைசர்ஸ் படைக்கு மெகா சர்ப்ரைஸ் வழங்கிய – காவியா மாறன்

Kavya Maran
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை சந்தித்திருந்தாலும் அதன் பிறகு தொடர்ச்சியாக நான்கு தோல்களை சந்தித்து புள்ளி பட்டியலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து ஏமாற்றம் அளித்தது.

சன் ரைசர்ஸ் அணிக்கு சர்ப்ரைஸ் வழங்கிய காவியா மாறன் :

பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற அவர்கள் அடுத்ததாக மேலும் இரண்டு போட்டியை இழந்தார்கள். இதன் காரணமாக முதல் 8 போட்டிகளில் முடிவில் 6 தோல்விகள் மற்றும் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்தனர். அதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்ற மிக முக்கியமான போட்டியில் பங்கேற்று விளையாடியிருந்தனர்.

- Advertisement -

அந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்த சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை 154 ரன்களுக்கு சுருட்டி பின்னர் எளிதாக 155 ரன்கள் வெற்றி இலக்கினை சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் தற்போதைய நிலையில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது.

இனி வரும் ஐந்து போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு இருப்பதால் தற்போது கடினமான நிலையிலேயே உள்ளது. ஆனாலும் சென்னை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறன் சன்ரைசர்ஸ் அணியின் வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை வழங்கி உள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அடுத்ததாக சன் ரைசர்ஸ் அணிக்கு மே இரண்டாம் தேதி தான் லீக் போட்டி என்பதனால் சென்னை அணியை வீழ்த்திய பின்னர் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரையும் மாலத்தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் நடராஜன் இடம்பெறாதது ஏன்? – கிண்டலாக பதிலளித்த கெவின் பீட்டர்சன்

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணி சரிவை சந்திக்கும் போது இதுபோன்று ஒரு உற்சாக பயணத்தை ஏற்பாடு செய்யும் அந்த வகையிலேயே தற்போது சன்ரைசர்ஸ் அணியை உற்சாகப்படுத்தும் வகையில் காவியா மாறன் இந்த ஏற்பாடு செய்துள்ளார் என்று தெரிகிறது. இதன் காரணமாக மாலத்தீவு சென்றுள்ள இந்த அணியின் வீரர்கள் இன்னும் சில தினங்களில் இந்தியா திரும்பி அடுத்த போட்டியில் விளையாடுவார்கள் என்றும் தெரிகிறது.

Advertisement