ஐபிஎல் தொடரின் (எட்டாவது லீக்) 8 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி மோசமான தோல்வியை அடைந்தது.
இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் இந்த மோசமான தோல்விக்கு காரணம் வார்னர் எடுத்த முடியும் என்று கூட கூறலாம். ஏனெனில் டாஸ் வென்று வழக்கமாக அனைவரும் இரண்டாவது பேட்டிங் செய்து சேசிங்கின் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அதற்கு மாறாக வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மேலும் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறில்லை. ஆனால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகளவில் ரன்களை குவித்து இருக்க வேண்டும். ஆனால் சன் ரைசர்ஸ் அணி 20 முழுமையாக விளையாடியும் 142 ரன்களை மட்டுமே குவித்தது. வார்னர், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே ஆகிய 3 பேரை தவிர அந்த அணியில் சொல்லிக்கொள்ளும்படி அதிரடியான ஆட்டக்காரர்கள் கிடையாது. முதல் மூன்று விக்கெட் விழுந்தால் அவர்களால் பெரிய அளவு ரன்களை அடிக்க முடியாது என்பது இந்த போட்டியில் தெரியவந்துள்ளது.
வார்னர் ஓரளவு சமாளித்து 36 ரன்கள் அடித்தார். ஆனால் வழக்கமான அவரது அதிரடி இந்த போட்டியில் இல்லை. அதேபோன்றுர மிடில் ஓவர்களில் சஹா 31 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் மட்டுமே அடித்து மந்தமான ரன் குவிப்புக்கு காரணமாக அமைந்தார். அதுமட்டுமின்றி பின்வரிசையில் பெரிய அளவு ஹிட்டர்களும் யாருமில்லை. சன் ரைசர்ஸ் அணியின் பலமே அவர்களது பந்துவீச்சாளர்கள் தான்.
எனவே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது எதிரணியை கட்டுப்படுத்தி இருந்தால் அவர்களால் எளிதாக சேசிங் செய்திருக்க முடியும். அதை தவிர்த்து முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களையும் விளையாடி வெறும் 4 விக்கெட் விழுந்தாலும் 142 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தக் குறைவான இலக்கை நிர்ணயித்ததால் சன் ரைசர்ஸ் அணி தோல்வியடைந்தது. இனிவரும் போட்டியிலாவது அந்த அணி அதிரடியாக ஆடினால் மட்டுமே போட்டியில் வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.