- Advertisement -
ஐ.பி.எல்

சன் ரைசர்ஸ் அணியில் இவரை சேக்கலனா தோத்துனே இருக்க வேண்டியதுதான் – இன்னக்காவது இவரை சேப்பாங்களா ?

இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் மேட்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இந்நிலையில் இந்தப் போட்டியிலாவது அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த சீசனில் இருந்தே ஹைதராபாத் அணிக்கு சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாமல் அந்த அணி தத்தளித்து வருகிறது.

மிடில் ஆர்டரில் இப்போது ஆடிக் கொண்டிருக்கும் மனிஷ் பாண்டேவும் பெரிய ஷாட்களை அடிக்காமல் நிதானமாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் கடைசியாக 2018 ஆம் ஆண்டிலிருந்து அவர் விளையாடிய 14 போட்டிகளில் 11 முறை 30 பந்துகளுக்கு மேல் சந்தித்தால் சன் ரைசர்ஸ் அணி தோல்வி அடைகிறது என்பதனால் அவரது இடம் தேவையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் அணிக்கு தேவையான போது பவுண்டரியும் சிக்சருமாக அடித்து ஆடக்கூடிய அதேசமயம் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும்போது அணியை சரிவில் இருந்து மீட்க பொறுப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தும் கேன் வில்லியம்சனை அணிக்குள் கொண்டு வராதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவே ஆகும்.

ஹைதராபாத் அணி இந்த தொடரில் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது இந்த இரு போட்டிகளில், முதல் போட்டியில் மட்டுமே மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது, அப்போதும் அந்த அணியால் வெற்றி பெற இயலவில்லை. இரண்டாவது போட்டியில் தொடர்ச்சியான விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது.

அதனால் இந்தப் போட்டியிலாவது கேன் வில்லியம்சனுக்கு வாய்ப்புக் கொடுத்து அணியை பலப்படுத்துவார்களா என்று ஹைதராபாத் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மும்பை அணிக்கு எதிரான இந்த போட்டியில் நிச்சயம் அவர் வேண்டும் என ரசிகர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by