சன் ரைசர்ஸ் அணி விளையாடவுள்ள 14 போட்டிகளின் முழு அட்டவணை – நேரம், தேதி, மைதான விவரங்கள் இதோ

srh

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி இந்தியாவில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் இங்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி செப்டம்பர் 19-ம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Dubai

இந்நிலையில் அதற்கான போட்டி அட்டவணை எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஐபிஎல் நிர்வாகம் போட்டி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர்களின் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

இந்த தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே விளையாடாதே என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது முதல் போட்டியாக மும்பை மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் மோதுகின்றன. மேலும் தொடரின் மொத்த போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியாகி உள்ளது. அதற்கான அனைத்து அறிவிப்பும் தெளிவாக வெளியாகியுள்ளது.

ipl

ipl1

- Advertisement -

ரசிகர்களின் சுவாரசியத்தை குறைக்காத வண்ணம் இத்தொடரின் பல போட்டிகள் இரவு 7.30 மணிக்கு நிறைய போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போது வெளியான இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் இந்த தொடரின் முதல் போட்டியை காண ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பங்கேற்க உள்ள 14 போட்டிகள், நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி இங்கே காணலாம்.

செப்டம்பர் 21, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், இரவு 7:30 மணி

செப்டம்பர் 26, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அபுதாபி, இரவு 7:30 மணி

செப்டம்பர் 29, டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அபுதாபி, இரவு 7:30 மணி

அக்டோபர் 2, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், இரவு 7:30 மணி

அக்டோபர் 4, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஷார்ஜா, இரவு 7:30 மணி

அக்டோபர் 8, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபாய், இரவு 7:30 மணி

அக்டோபர் 11, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், துபாய், மாலை 3:30 மணி

அக்டோபர் 13, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், இரவு 7:30 மணி

அக்டோபர் 18, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபுதாபி, மாலை 3:30 மணி

அக்டோபர் 22, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், இரவு 7:30 மணி

அக்டோபர் 24, கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், இரவு 7:30 மணி

அக்டோபர் 27, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், துபாய், இரவு 7:30 மணி

அக்டோபர் 31, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஷார்ஜா, இரவு 7:30 மணி

நவம்பர் 3, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி