பேர்ஸ்டோவிற்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அற்புதமான வீரரை தேர்வு செய்த – சன் ரைசர்ஸ்

Bairstow-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 09-ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றன. இந்த தொடருக்கான போட்டிகளிலிருந்து பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் விலகி உள்ளனர்.

IPL

- Advertisement -

அடுத்து டி20 உலக கோப்பை தொடர் வருவதன் காரணமாகவும், கொரோனா அச்சம் காரணமாகவும் பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் பல அணிகளுக்கும் இழப்பு ஏற்பட்டு மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சன் ரைசர்ஸ் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக தற்போது சன்ரைசர்ஸ் அணி பேர்ஸ்டோவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரரான ஷெர்பேன் ரூதர்போர்டை அணியில் இணைத்துள்ளது.

rutherford

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இளம் வீரரான இவர் 2018 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமாகி 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரிலும் தற்போது நடைபெற்று வரும் கரீபியன் லீக் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

rutherford 1

23 வயதான இவர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமாகி 7 போட்டியிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement