இன்னைக்கு போட்டியிலாவது ஜெயிக்கணுனா சன் ரைசர்ஸ் டீம் இந்த 3 மாற்றத்தை செய்ஞ்சே ஆகனும் – லிஸ்ட் இதோ

Warner
- Advertisement -

முதல் மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று நடக்க இருக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்சை எதிர்கொள்ள இருக்கிறது. நாளைய போட்டியிலாவது தனது முதல் வெற்றியை பதிவு நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் மூன்று மாற்றங்கள் நிச்சயமாக மேற்கொள்ள இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கேன் வில்லியம்சனின் வருகை :

முதல் மூன்று போட்டியில் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வி தற்போது வரை எழுப்பி வருகிறது. பல மேட்சுகளில் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற பெருமை கேன் வில்லியம்சனுக்கு உண்டு. 2018 ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்காக விளையாடிய வில்லியம்சன் 735 ரன்கள் அடித்து அந்த ஆண்டிற்கான ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார். மேலும் சென்ற ஆண்டு கூட அணைக்கு தேவைப்படும் நேரங்களில் மிக நிதானமாக ஆடி ரன்களை குவித்தது வில்லியம்சன் பெரிய பங்கு வகித்தார்.

எனவே இந்த போட்டியில் நிச்சயமாக முஜிபுர் ரஹ்மானுக்கு பதிலாக அவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் மிடில் ஆர்டர் பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

Jadhav

கேதர் ஜாதவ் :

வில்லியம்சன் போலவே கேதர் ஜாதவ் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அணிக்காக போட்டியை இறுதி வரை எடுத்துச் சென்று ரன்களை குவித்த வீரராவார். அவர் இந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கிறார். மூன்று போட்டி முடிவடைந்த நிலையில் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. நிச்சயமாக இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவார் என அனைவரும் கூறி வருகின்றனர். இளம் வீரர் விராட் சிங் முந்தைய போட்டியில் சரியாக ஆடவில்லை. எனவே அவரை ஆட வைக்கும் பட்சத்தில் பேட்டிங்கும் அதே சமயத்தில் பௌலிங் சற்று பலப்படும்.

nattu

தங்கராசு நடராஜன் :

கலீல் அகமது 3 போட்டியிலும் விளையாடி விக்கட்டுகளை ஒரு பக்கம் கைப்பற்றினாலும் அதிக ரன்களை மறுபக்கம் கொடுத்து வருகிறார். அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் நிச்சயமாக ஆடும் பட்சத்தில் அவருக்கு இணையாக ஆடக்கூடிய ஒரே வீரர் தங்கராசு நடராஜன் தான். நடராஜன் நிச்சயமாக இறுதி ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவுவார் எனவே நாளைய போட்டியில், புவனேஸ்வர் குமார் மற்றும் தங்கராசு நடராஜன் நிச்சயமாக விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Advertisement